ஆ ஃப் பையிலில் பேப்பர் அதிகமாக இருப்பதாக கூறி கடையின் உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி நான்கு ரோடு தம்மம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் குமரேசன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார் .
இதனிடையே நேற்று இவரது கடைக்கு கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்து கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ஆப்-பாயில் ஒழுங்காக போட வில்லை பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் . பின்னர் கடையில் இருந்த மாவு, முட்டைகளை கீழே தள்ளி சூறையாடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இதனை தொடர்ந்து விசாரணையின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஓட்டலில் இருந்த சிசிடிவி, கேமராவை ஆய்வு செய்தனர் .
அப்போது குடிபோதையில் ஓட்டலை சூறையாடிய அதிமுக, பிரமுகர்களான பிரவீன், பிரபு, கௌதம் , நடராஜ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்,அவர்களை கைது செய்தனர்.