சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கங்குவா படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் கங்குவா.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து மிக பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் .
ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார் .
இவர்களுடன் சேர்ந்து கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி கங்குவா படத்தின் ட்ரைலர் நாளை மதியம் 1 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.