மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயிளை நேரில் பார்வையிட்டு, பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு(Minister Shekar Babu) மரியாதை செலுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பிரசித்தி பெற்றது. அதை நிறுவி, ஆன்மிக சேவையாற்றிய பங்காரு அடிகளார், கடந்த 19ம் தேதி உயிரிழந்தார்.
ஆதிபராசக்தி சித்தர் பீட புற்று மண்டபத்தில், பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறிய இடத்தில், சித்தர்கள் முறைப்படி அவரது உடல் அமர்ந்த நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிலையில்,இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் திபராசக்தி திருக்கோயிளை நேரில் பார்வையிட்டனர். பின்னர் சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.