Tvk vijay-திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது’ குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தேசிய கல்லூரியில் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் வருகின்ற 7ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பன்னாட்டு கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின்
அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர்.
அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன்.
இதையும் படிங்க:Sasikala Meet-” எதிரே வந்த சசிகலா..” காரில் இருந்து இறங்கி ஓபிஸ் செய்த காரியம்!!
மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும்.
இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.
பின்னர் தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
தமிழக மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற தமிழக வெற்றி
கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்யை வாழ்த்தி, வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1753714442091761676?s=20
இந்த சூழலில் , நடிகர் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு,’நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அருமையான அண்ணன்.
நேரடியாக பேசும் போதும் அன்பொழுக பேசக்கூடியவர்தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
‘திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின்(Tvk vijay)கட்சியின் பெயரில் இல்லாதது’ குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், “கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம்.
கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது,
அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும் என்று தெரிவித்தார்.