புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கொல் அருகில் நிற்பதை எண்ணி, தான் பெருமைப்படுவதாக ஓ பி ரவீந்திரநாத் எம்.பி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். காலை 7.30 மணி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பூஜைகள் முடிந்த பின்னர், தமிழக மறைகள் முழங்க பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கப்பட்டு நிறுவபட்டது.
இது குறித்து அவர் வெளியட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில்,
இந்திய சுதந்திரத்திலும், அதிகாரப் பரிமாற்றத்திலும் தமிழகத்தின் பங்களிப்பு என்பது மிகவும் பெருமைக்குரியது, தேசத்தின் பாரம்பரியம், கலாச்சார பலம், சமநீதி, தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டவும்,
திறமையான மற்றும் நேர்மையான ஆட்சி நடத்தவும் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீன குருமார்கள் மற்றும் ஓதுவார்கள் பங்கேற்று, தேவாரம் பாடி ஆசிர்வதிக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் அருகில் நிற்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வரலாற்று சரித்திர சாதனை படைத்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில், தேனி நாடாளுமன்ற உறுப்பினராகவும், அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராகவும், தமிழக மக்களின் சார்பாக நான் கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.