தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை மேற்கொள்ளபட்டதாக குற்றம்சாட்டி இருந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,தமிழ்நாடு அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம்,ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை நடத்தி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ,சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 ஆண்கள் , 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல் என்றும், அது போன்ற நிகழ்ந்து நடந்ததாக தகவல் இல்லை எனவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 குழந்தைகளுக்கு திருமணங்கள் நடந்து இருந்தால் ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தது.
மேலும் சிதம்பரம் தீட்சிதர் குடும்ப சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பாக ஆளுநர் ரவி குற்றம் சாட்டிய நிலையில் அது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என காவல்துறை தெரிவித்தது.
மேலும் பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு தடை செய்யபட்ட இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.