சிறந்த கல்வியாளரும், ஆன்மீகவாதியும், பாரம்பரியமிக்க மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.கருமுத்து கண்ணன் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்வித் தொண்டாற்றியவரும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தக்காராக பல்வேறு ஆன்மீக பணிகளை செய்தவரும் மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவமான திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
மேலும் அவரது உடலானது பொதுமக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.இவரது மறைவிற்கு பிரபலங்கள் , பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்,ஆன்மிக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதிமுகபொதுச்செயலாளர் வைகோ அவரது உடலுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது திரு. கருமுத்து தி. கண்ணன் உடலை பார்த்து கதறி அழுந்த சம்பவம் பலரையும் கண்கலங்க செய்தது.