இயக்குநர் பாரதிராஜாவை(bharathiraja) பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா 82 வயதிலும் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார்.சமீபத்தில் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து பட்டையை கிளப்பினார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது 82 வயதாகும் பாரதிராஜாவுக்கு(bharathiraja )வயது மூப்பின் காரணமாக லேசான உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை கவிஞர் வைரமுத்து இன்று சந்தித்தார். மேலும் பாரதிராஜா குறித்து தான் எழுதிய கவிதையை வைரமுத்து அவரிடம் வாசித்து காட்டினார். தற்பொழுது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.