உலகெங்கும் பரவிக்கிடக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழை போல (PMOIndia) பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உலக மக்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு அயோத்தியில் இன்று ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த கனவு இப்போது நனவாகியுள்ளது.
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் தரையில் உறங்கி, கடுமையான விரதம் இருந்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது ராமரோடு தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார்.
அதன்படி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி நேற்று மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றி ராமர் கோயில் சாத்தியமாகி இருக்காது.
நம் தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ராமர் கோயிலுக்காக 500 ஆண்டுகளாக போராடி அனைவருக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் இன்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற உள்ளதால் அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு
11,000 ‘சிசிடிவி’ கேமிராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Also Read : https://itamiltv.com/successfully-closed-the-chennai-book-fair/
இந்நிகழ்ச்சியில் நாட்டில் உள்ள ஏராளமான அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
(PMOIndia) எஸ்பிஜி, என்எஸ்ஜி , தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை
மாநில போலீஸார் உட்பட மொத்தம் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்