நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – திருச்சி எஸ்.பி. வருண்குமார் IPS இடையே வார்த்தை மோதல் நடைபெறும் நிலையில் தற்போது வருண்குமார் போட்டுள்ள பதிவு வைரலாக வலம் வருகிறது.
இதுகுறித்து ருண்குமார் IPS வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. IPS பதவி. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை.
பெற்றோரின் கருணையால், உரப்புலி குலதெய்வத்தின் அருளால் UPSC CSE 2010ல் All India Rank 3 எடுத்ததை நினைவு கூறுகிறேன்.
உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.
பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கிச் சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன்.
நான் காக்கிச் சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ? என காக்கிச் சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள் என சவால் விடுத்த சீமானுக்கு வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.