சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் விடுத்துள்ள செய்துகுறிப்பில் கூறியதாவது :
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தையின் கை அழுகி இறந்து போனது மிகவும் கவலை அளிப்பதோடு கண்டனத்துக்குரியது.
அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். எனவே இனிமேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தமிழக அரசு மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தையின் உயிரை இழந்துவாடும் அந்த குடும்பத்திற்கு தேவையான இழப்பீடு தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனையின் சிகிச்சை கவனக்குறைவாக இல்லாமல், ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பு மிக்கது என்பதை மனதில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் செயல்படவேண்டும். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .