சமீப காலமாக இணையதளங்களில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் டிரெண்டாகி வருவது வாடிக்கைதான். ஆனால் சில அதிர்ச்சியும், திகிலூட்டும் சம்பவங்களும் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில், சிறுமி கழுத்தில் ராட்சத பாம்பு ஒன்று ஹாயாக பாத்ரூமில் குளிக்கும் வீடியோ பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.
பதம் பார்த்த ராஜநாகம்:
கர்நாடக மாநிலம் பொம்மனகட்டே என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதி, குடியிருப்புக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது. உடனே அதை பிடிக்க வீரரை அழைத்துள்ளனர்.
பாம்புபிடி வீரரோ, நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.. நாகப்பாம்பு ஆனால், அத்துடன் விடவில்லை.. அந்த நாகப்பாம்பின் பின்னால் இருந்து முத்தம் தந்துவிட்டார்.. அந்த பாம்பு என்ன கோவத்தில் இருந்ததோ, டக்கென ஆக்ரோஷமாக திரும்பி வீரரின் உதட்டில் வேகமாக தீண்டிவிட்டது.. உதட்டில் இருந்து அந்த இளைஞருக்கு ரத்தம் கொட்டியது.. இதனால் பதற்றம் அடைந்து, பாம்பை விட்டுவிடுகிறார். இதற்கு பிறகு, அந்த இளைஞருக்கு சிகிச்சை தரப்பட்டு உயிரை காப்பாற்றி விட்டார்கள்..இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது..
அதேபோல இன்னொரு வீடியோவில், ஒரு பெண், பாத்ரூமில் ஏகப்பட்ட பாம்புகளை குளிக்க வைக்கிறார்.. அதுவும் அந்த பாம்புகளுக்கு சோப்பு போட்டு குளிக்க வைக்கிறார். பாத்ரூமில் பாம்பு இந்த பாம்புகள் எல்லாம் கருநாகங்கள்.. தண்ணீரை கருநாகப் பாம்புகள் மீது ஊற்றுகிறார்.. பிறகு, குழாயிலிருந்து ஓஸ் பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சி பாம்புகளை குளிக்க வைக்கிறார்.. ஒவ்வொரு பாம்புகளின் மேலுள்ள அழுக்குகளையும் கையால் தேய்த்து விடுகிறார்..
எப்படியும் கிட்டத்தட்ட 50 பாம்புகள் இருக்கும்.. எல்லாமே பாத்ரூமில் ஒரே இடத்தில் அமைதியாக நெளிந்து கொண்டிருக்கின்றன.. நடுநடுவே அந்த பாம்புகளை கொஞ்சி கொள்கிறார்.. அப்படியே பிரஷ் வைத்து பாத்ரூம் தரையை சுத்தமும் செய்கிறார்.. இந்த பெண் குளிக்க வைத்து முடிக்கும்வரை, கப்சிப் என்று சமத்தாக நாகப்பாம்புகள் நின்று கொண்டிருக்கின்றன.. இந்த வீடியோவை பார்த்து பலரும் வெலவெலத்து போய்விட்டனர். இதோ இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது.
கழுத்தில் தொங்கிய பாம்பு – ஹாயாக பல் துலக்கும் சிறுமி:
சிறுமி ஒருவர் தன்னுடைய கழுத்தில், ஒரு பாம்பை மாட்டிக்கொண்டு பாத்ரூமுக்குள் செல்கிறார்.. அப்படியே தன் பல்லையும் துலக்குகிறார்.. அந்த பாம்பு சுமார் 7 அடி உயரமுள்ளது.. அது அப்படியே சிறுமியின் கழுத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.. பாம்பு கழுத்தில் ஒருபக்கம் கிடக்க, இவர் ஒருபக்கம் அசால்ட்டாக பல் தேய்க்கிறார்.. கேஷூவல் பயம் என்பது துளிகூட காணப்படவில்லை..
மாறாக, படு கேஷூவலாக ஸ்டைலாக டான்ஸ் ஆடிக்கொண்டே பல் துலக்குவதுதான் ஸ்பெஷல். அதுவும் அந்த பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் நின்றுகொண்டே பிரஷ் செய்கிறார்.. இவர் டான்ஸ் ஆடினால், அந்த பாம்பும் கழுத்தில் தொங்கி கொண்டே வளைந்து நெளிகிறது.. இந்த வீடியோவை பார்த்தால், பாம்பு இவர்கள் குடும்பத்திற்கு பலநாள் பழக்கம் போல இருக்கிறது..