சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்திய அணியின் லெஜெண்டாக அஸ்வின் நினைவு கூறப்படுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து வீச்சாளராக இந்திய கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கிய அஸ்வின் இன்று ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார்.
அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிபயங்கரமாக விளையாடி பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
Also Read : புஷ்பா-2 கூட்டநெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு..!!
இந்நிலையில் திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்துள்ள அஷ்வினுக்கு முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அவரின் அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அஸ்வின் உடனான நட்பு குறித்து விராட் கோலி உருக்கமாக பேசியுள்ளார்.
அஸ்வின் குறித்து விராட் கோலி கூறியதாவது :
நான் உங்களுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளேன்.. ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என நீங்கள் இன்று
என்னிடம் சொன்னபோது உணர்ச்சிவப்பட்டு, நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தேன்.
இந்திய அணியின் வெற்றிகளுக்கு நீங்கள் செய்த பங்கு, உங்கள் கிரிக்கெட் திறனுக்கு ஈடு இணையே இல்லை |இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.