Akbar and Sita lions | சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து ஞானவாபி, மதுரா போன்ற இடங்களில் அமைந்துள்ள மசூதியை இடித்துவிட்டு இந்து கோயில் கட்ட வேண்டும் என இந்துத்துவ சிந்தனையாளர்கள்
தொடர் சர்ச்சைகள் எழுப்பி வருவது அதிர்ச்சியையும் மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
அந்த வகையில்,சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு,
இதையும் படிங்க: TN Budget 2024: பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு.. விளையாட்டு வீரர்கள் குஷி!
கடந்த பிப். 12-ம் தேதி 7 வயதுடைய அக்பர் எனும் ஆண் சிங்கமும்,6 வயதுடைய சீதா எனும் பெண் சிங்கமும் கொண்டு வரப்பட்டன.
வெவ்வேறு இடங்களில் பிறந்த இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில வனத்துறைக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில், “உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர்.
அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது.
இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1759474289181684198?s=20
சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், ‘அக்பர்’ சிங்கத்துடன் ‘சீதா’ சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும்.
சிங்கத்தின் பெயரை “சீதா” என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விஷ்வ இந்து பரிஷத் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா முன்பு (Akbar and Sita lions), விசாரணைக்கு வந்தது.இதையடுத்து வரும் 20ஆம் தேதி இந்த வழக்கு நடைபெறும் என தெரிவித்தார்.