VJ Chitra suicide case : நடிகை விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் உட்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ரேவதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாகவும், விஜே-வாகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி அன்று தன்னுடைய கணவர் ஹேம்நாத்துடன் பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க : “தாத்தா வந்துட்டாரு” ஓடிடியில் வெளியானது கமல்ஹாசனின் இந்திய 2..!!
சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேம்நாத் தான் காரணம் என,அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு நடத்த விசாரணையில் ஹேம்நாத் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஹேம்நாத் ஒரு வருட ஜெயில் தண்டனைக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர் ஒரு சில பேட்டிகளில் சித்ராவின் தற்கொலைக்கும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் மற்றும் குறிஞ்சி செல்வன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மீண்டும் சித்ராவின் கொலை வழக்கில் ஹேம்நாத் உட்படஏழு பேர் மீது நசரத் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதையடுத்து இது கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் மகிலா நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, சித்ராவை கொலை செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமோ, சாட்சியோ இல்லாத காரணத்தால் இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் வைத்து ஹேம்நாத் கண்கலங்கி அழுது உள்ளார். அது புகைப்படங்களும் வீடியோக்களும் இப்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், அதை பார்த்த விஜே சித்ரா சிகர்கள் பல பேரை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சித்ரா எப்படி இறந்தார்? என்று விடை தெரியாமலேயே போய் விட்டதே என்று தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.