கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கேரளா மாநிலம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மலையாற்று வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது .
இந்நிலையில் இந்த தொடர் மழையால் வயநாட்டில் இன்று அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் பாஜகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை – தமிழிசை
இந்த துயர சம்பவத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்த பேரிடர் காலத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார் .
மேலும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுமெனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.