நம் நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும் பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என ஆளுநர் ரவி தெரிவித்து உள்ளார்.
சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஜன ஆரோக்கிய மேளா சார்பில் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ முகாமினை துவங்கி வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி,
நம் நாட்டை குடும்பமாக பார்க்கவேண்டும் பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது.சுகாதாரப் பிரச்சனை என்பது நாட்டின் பிரச்சனைநாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டு நாட்டின் சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதே ஜனநாயக கடமை எனவும்தூய்மையின்மை பணக்காரர்களை விட ஏழைகளுக்கு அதிகமாக பாதிக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை தூய்மையான குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் முக்கியம் எனவும் கட்டைகளை எரித்து சமைப்பதன் மூலம் அந்த புகை உடல் நலக் குறைபாடு ஏற்படுத்தும்
சுகாதார விழிப்புணர்வு என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.தற்பொழுது நம் நாட்டில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.இன்று மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியையாவது செயல்படும் வகையில் நம் நாடு முன்னேறி வருகிறது எனவும்.
தமிழகத்தில் 55க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன மேலும் கடந்த ஆண்டு 13 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரோக்கிய மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.