இந்தியாவில் கொரோனோ தொற்று முடிவுக்கு வரும் நேரத்தில் சி.ஏ.ஏ வை நிச்சயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சிறப்பான அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி அரசு அலுவலகத்தில் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பினராயி ,” குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேரள அரசுதிட்டவட்டமாக நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கிறது எனத் தெரிவித்த அவர்,திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் இப்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்தார். 

இந்தச் சட்டத்தில், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்த இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி மதத்தினர் இந்தியாவில் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நம் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டு இருக்கும் மதசார்புபின்மை கொள்கையை அழிப்பதற்காகவும்,மேலும் மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமையும்.
ஆனால் நமது நாட்டில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு முடக்கிவிடும் செயல் என்று தெரிவித்துள்ளார்.2019 டிசம்பர் 11ம் தேதி இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது