தமிழகத்தில் 9 மாவட்டங்களில் (9 districts) இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் (9 districts) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாளை (03.07.23) நீலகிரி, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், அதனை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (04.06.23) திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தென்தமிழகம், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.