இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி என்னும் இடத்தில் அமைந்த்துள்ளது புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. இந்த ஆலையம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் ஆரோக்கிய அன்னையின் பக்தி அங்கு பரவியது. இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் குணமடைந்தது, போர்த்துகீசிய மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது இந்த அற்புதங்களை செய்த் அன்னையின் பக்தி உலகறிந்தது.
இவ்வாலய விழா நாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பதும் இங்கே குறிக்கத்தக்கது.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. . வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.