20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ( pakistan ) – தென் ஆப்பிரிக்கா ( south africa ) அணிகள் பலபரீட்சை செய்யயுள்ளன . இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமாகும். குறிப்பாக இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு நீடிக்கும்.
குரூப் 2 பிரிவில் இதுவரை தென் ஆப்பிரிக்கா அணி ஒரு தோல்வி கூட பெறவில்லை, பாகிஸ்தான் அணியோ இதுவரை ஒரே ஒரு வெற்றி தான் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது தான் தொடரின் திருப்புமுனையானது.
தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங்க, ஃபீல்டிங் என அனைத்து பகுதியிலும் மிரட்டலான வீரர்களை கொண்டுள்ளது. தொடக்கத்தில் டி காக், ரூசவ்வின் ஆட்டம் எதிரணி பந்து வீச்சை நிலைகுலைய செய்யும்.மத்திய வரிசையில் மார்க்கரம், மில்லர் அணியின் அதிரடிக்கு அடிதளம் அமைக்கின்றனர்.
இந்த உலகக்கோப்பையில் சிறந்த பந்து வீச்சை கொண்ட அணியில் தென் ஆப்பிரிக்கா தான் முதலிடம். பலம் வாய்ந்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து ஒற்றை இலக்கில் வெளியேற்றி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காக இருந்தது. குறிப்பாக ரபாடா, லுங்கி கிடி, நார்ட்ஜி ஆகியோரின் சீற்றமான பந்துகளை எதிர்கொள்வது பெரும் சவால் தான்.
பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சிள் எந்த குறைப்பாடும் இல்லை, அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோரின் வேகம் மற்றும் சுவீங் எதிரணிக்கு ரன் குவிக்க தடையாக இருக்கும். ஆனால் பேட்டிங் தான் கவலைகுள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரங்களான பாபர் – ரிஸ்வான் இனண தொடர்ந்து சொதப்புவதால் அணியின் ஸ்கோர் பெரிதாக உயரவில்லை.
மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் எப்போதாவது தான் ரன்கள் அடிக்கின்றனர். ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைய மோசமான பேட்டிங் தான் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் வென்றால் கூட உறுதியாக பாகிஸ்தான் அரை இறுதி செல்லுமென்று சொல்லமுடியாது. பிரிவில் உள்ள மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பொறுத்து தான் அவர்கள் தகுதி பெறும் சூழல்வுள்ளது.