மெரினா கடற்கரையில் திமுக சார்பில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்பத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (kanimozhi mp) நேரில் பார்வையிட்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும்மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா, பிரியங்கா
காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதனை முன்னிட்டு முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளையும் திமுக மகளிரணி மற்றும் மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வருவதால், சென்னையில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரையில் திமுக சார்பில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாடு குறித்த மணல் சிற்பத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளரும் கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…
சென்னையில் இன்று மாலை திமுக சார்பில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் முக்கிய குரலாக பாஜகவுக்கு எதிராக இருக்கும். மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் மிகப்பெரிய அளவில் கொடூரமானவகளை அதிகமாக பெண்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவிலேயே முற்றிலுமாக பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வு இல்லாத சூழ்நிலை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் பெண்களுடைய குரல், பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கருத்துகளை மையப்படுத்தி இந்த மாநாடு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த மாநாடு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வவையில் முக்கிய பங்காற்றும்” என்று தெரிவித்துள்ளார்.