உலக யானைகள் தினம் இரண்டு கனடா திரைப்பட தயாரிப்பாளர்களான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் கனஸ்வெஸ்ட் படங்களின் மைக்கேல் கிளார்க் மற்றும் தாய்லாந்தின் யானை மறு அறிமுக அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சிவபோர்ன் தர்தராண்டா ஆகியோரால் தொடங்கப்பட்டது. முதல் உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12, 2012 அன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ,வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் மனித-விலங்கு மோதல் ஆகியவை யானைகள் தாங்க வேண்டிய சில பிரச்சினைகளாகும். ஆப்பிரிக்க யானைகள் ‘பாதிக்கப்படக்கூடியவை’ மற்றும் ஆசிய யானைகள் ‘அழிந்துவரும்’ என சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அச்சுறுத்தும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். ஒரு வயது வந்த யானை 3 மீ உயரம் மற்றும் 7,500 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும்.இப்படி ஒரு புறம் யானைகள் அழிந்து வந்தாலும் மறுபடியும் யானைகளுக்கு மறுவாழ்வு மையங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் தற்போது இரண்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆறு வயதான பிரகதி மற்றும் நான்கு வயதான ரோகிணி ஆகிய இரண்டு யானைகள்தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இரண்டு யானைகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தண்ணீரில் விளையாடும் காட்சிகளை காண பொதுமக்கள் வருகின்றனர் .மேலும் அதிலும் குட்டி யானை ரோகிணியின் குறும்பு செயல்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு கூறலாம்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளை பராமரிப்பது கடினமான செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை, சில ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த அசோக் என்ற ஆண் யானை, பிறந்த மூன்று மாதத்தில் கொண்டுவரப்பட்ட அசோக், எட்டு வயது வந்ததும் வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் கடும் வெயிலில் இருந்து நிவாரணம் பெற யானைகளுக்கு மழை மற்றும் குளத்தில் தினமும் இரண்டு முறை சுவர அனுமதிக்கப்படுகிறது.