பெண்கள் நிச்சயமாக அதிகாலை வேலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். குடும்ப தலைவிக்கு இந்த பொறுப்பு நிச்சயம் உண்டு.
குடும்ப தலைவியாக இருக்கக்கூடிய நீங்கள் பொறுப்போடு காலையில் எழுந்து வாசல் கூட்டி கோலம் போட்டு வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு தான் அன்றைய நாளை துவங்க வேண்டும். பின்னர், விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே
கௌரி நாராயணி நமோஸ்துதே!!
இது கௌரி மந்திரம். காலையில் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலை இருக்கும் போது கூட பெண்கள் இந்த மந்திரத்தை மனதில் ஒரு முறை சொல்லிவிட்டு வேலையை தொடங்கலாம். அடிக்கடி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொன்னாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை வீட்டில் இருக்கும் பெண்களின் வாயால் உச்சரிக்க உச்சரிக்க வீட்டின் வறுமை நீங்கும். நாள் பட உங்களுடைய வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் தினமும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை இந்த மந்திரத்தை சொல்லி மங்கள சண்டிகையை வழிபாடு செய்தால் உங்கள் மனம் போல் வாழ்க்கை அமையும்.
திருமண வாழ்க்கை பிரச்சினை ஆகாது. அதேபோல குடும்ப தலைவிகள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பெண் பிள்ளைகளுக்கு கூட இந்த மந்திரத்தை, சொல்லிக் கொடுத்து அடிக்கடி சொல்ல சொல்லுங்கள். தவறு கிடையாது.