கோவை அருகே திருநம்பி ஒருவரை பட்டதாரி இளம் பெண் ஒருவர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திரு முக்கூடல் பிள்ளையார் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மகள் அருணா தேவி. (பி.காம்) இளம் பட்டதாரியான இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பாய்ஸ் என்ற அழைக்கப்படும் திருநம்பிகையைக் கடந்த ஆறு மாதங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருணா தேவிக்கும் அருண் பாய்ஸ் குடும்பத்தாருக்கும் இவர்களது காதல் தெரியவரவே இவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அருணா தேவி மற்றும் அருள் பாய்ஸ் ஆகியோர் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குமாரபாளையத்தில் உள்ள அவர்களது நண்பர்கள் மூலமாகக் கோவை மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனித சட்ட உதவி மையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதனையடுத்து தம்பதிகள் இருவரும் பெரியாரின் புகைப்படத்திற்கு முன்பு மாலைகளை மாற்றி பெரிய சீர்திருத்தத் திருமணத்தில் மேற்கொண்டனர்.
மேலும் காதல் தினத்தன்றுவர்கள் திருமணம் நடைபெற்றதால் இவர்களுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.