சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . மொத்தம் 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் சாமானில் முடிந்தது.
இதனையடுத்து நேற்று 13வது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றும் டிராவில் முடிந்த நிலையில் .நேற்று 14வது சுற்று நடைபெற்றது . கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சுற்றில் தனது அபார நகர்வால் குகேஷ் வெற்றிப் பெற்றார்.
இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றுள்ளார் . இதுமட்டுமின்றி விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.
வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த குகேஷ் கூறியதாவது :
ஒவ்வொரு செஸ் வீரருக்கும் இருக்கும் கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகால தீவிர பயிற்சிக்கு பின்னர் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இந்த நாளுக்காக 10 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன்.
11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடமிருந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பறிக்கப்பட்டது. என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை உரிதாக்குகிறேன் என குகேஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.