ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை : இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது உத்தரவை மீறி இயங்கும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைப்பூசம்(25.01.24), குடியரசு தினம் (26.01.24) மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை நோக்கி செல்லும் (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) அனைத்து ஆம்னி பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : தேசபக்தி இல்லாத பாசிச இயக்கம் பா.ஜ.க – அழகிரி!!
எனவே, ஆம்னி பேருந்துகள் சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்கூட்டியே திட்டமிட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்கு ஏற்ப RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் உரிய மாற்றங்களை செய்யவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மூடேற்றும் முருங்கைக்காய் துவையல்.. கொஞ்சம் டிஃப்ரெண்ட்டா ட்ரை பண்ணி பாருங்க!
இதை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல், அவர்களை தேவையின்றி சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை : அத்துடன், அரசின் உத்தரவை மீறினால் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.