எப்போ பாத்தாலும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார், குருமா என்று சமைத்தது சலித்துப்போன ஹவுஸ் வைஃப்ஸ்… உங்களுக்காக தான் இந்த ரெசிபி.. சைதாபேட்டை வடகறி..
இன்னைக்கு ஸ்பெஷலா சைதாபேட்டை வடகறியை செய்யுங்கள். இந்த வடகறி இட்லி, தோசை, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அல்டிமேட்டாக இருக்கும். இதை சமைப்பதும் மிகவும் சுலபம்.
இதையும் படிங்க : உடலுறவில் ஆர்வம் இல்லையா? ‘இந்த’ விஷயம் தான் காரணம்.. இத பண்ணாதீங்க!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை, ஏலக்காய், கிராம்பு (தாளிக்க)
கருவேப்பிலை, மல்லி இழை ( பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1
பழுத்த தக்காளி – 2
சீரகத் தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
துவரம்பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் மிக்சர் ஜாரில் சேர்த்து அதனுடன் சோம்பு, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ளதை வடைகளாக பொரித்து எடுக்க வேண்டும்.
பிறகு பொரித்து வைத்துள்ள வடைகளை கைகளால் உதிர்த்து விட விட வேண்டும்.
மீண்டும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி விட்டு, 1 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக மூடியைத் திறந்து, உதிர்த்து வைத்துள்ள வடையை சேர்த்து நன்கு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கினால், ஆவி பறக்க தலைவன் சைதாபேட்டை வடகறி ரெடி..
இட்லி, தோசை, பூரிக்கு மட்டுமல்லால் சுட சுட சாதத்தோடும் சேர்த்து பரிமாறலாம் பிரெண்ட்ஸ்..