தை அமாவாசை 2024 : நம் சந்ததி சிறப்புற செம்மையாக வாழவேண்டுமெனில், நம் மூதாதையரை அமாவாசை நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்க வேண்டும்.
காவிரி, தாமிரபரணி முதலான நீர்நிலைகள், ஆறு மற்றும் குளக்கரைகளில் பித்ரு தர்ப்பணம் செய்வது உன்னதமானது.
அமாவாசை நாள் அன்று எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே தான் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க முக்கியக் காரணம் என கூறுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதையும் படிங்க : இலங்கையின் தொடர் அத்துமீறல் : தமிழக மீனவர்கள் 19 பேர் கைது – டிடிவி கண்டனம்!
ஒரு வருடத்தில் தமிழ்மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்கள், கிரகண நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணம் செய்யவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு வருடத்துக்கு மூன்று முக்கியமான அமாவாசைகள் உள்ளன. அவை ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இவை தவிர மாதந்தோறும் வருகிற அமாவாசையிலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.
அந்தவகையில் இன்று தை அமாவாசை. இன்று நம் முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களையும் நம்முடைய கோத்திரத்தையும் சொல்லி எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.
முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு அலங்கரித்து மனதார வணங்கினால் குடும்பம் செழிக்கும்.
இன்று அவசியம் காகத்துக்கு உணவிட வேண்டும். நாம் விடுகிற எள்ளும் தண்ணீரும், காகத்துக்கு வைக்கப்படுகிற உணவும் முன்னோர்களுக்குப் போய்ச் சேருகிறது என்றும்,
அவர்கள் மகிழ்ந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிக்கிறார்கள் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
இதையும் படிங்க : “தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும்!
தாய், தந்தை இல்லாத ஆண்கள், கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இன்று தை அமாவாசை 2024 : திதி காலை 08.05 மணிக்கு துவங்கி, நாளை பிப்ரவரி 10 அதிகாலை 4:28 மணிக்கு முடிவடையும்.
எனவே, காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது. திதி கொடுக்க நல்ல நேரம் காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் கொடுக்கலாம்.