இறால் தொக்கு : கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு.
இதையும் படிங்க : கோபமாக இருக்கும் போது செக்ஸ்? இது என்ன பண்ணும் தெரியுமா?
சரி.. இறாலை வைத்து சுட சுட சாதத்தோடு சாப்பிட சுவையான தொக்கு எப்படி சமைப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள் :
இறால் – 1/4 கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை
கடுகு – 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – 1 பின்ச்
கரம் மசாலா தூள் -1டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
முதலில் இறாலை வாங்கி வந்ததும் அதை முறையாக நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில், தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் அதில், கடுகு போட்டு நன்கு பொறிந்ததும், கீறாத முழு பச்சை மிளகாய் 2, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் 10 பல் பூண்டு, நறுக்கி வைத்துள்ள பழுத்த தக்காளி பழம், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போனதும், இப்போது அதில் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதங்கிய பின்னர் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
இப்போது இதில் இறால் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் மூடிவிட்டு திறந்து நன்கு கிளறிவிட வேண்டும். இறால் வெந்ததும், அதில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் ஆவி பறக்க சுட சுட சாதத்துடன் இறால் தொக்கு சாப்பிட ரெடி.. அருமையாக இருக்கும்..