அரியலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்கள சகாதேவன், வனிதா தம்பதிகள். இந்த தம்பதிக்கு 12ம் வகுப்பு படிக்கும் அபினா என்ற மகள் இருந்தார். நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அபினா. முடிவுக்காக காத்திருந்ததுள்ளார்.
இந்த நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் அபினா 600 மதிப்பெண்களுக்கு அபினா 397 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதனை பார்த்த அபினா குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டேனே என 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மாணவி அபினா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.