சத்தீஸ்கரில், சிறுமியை மயக்க மருந்து (drugged) கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரகேரியுள்ளது. மேலும், இந்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 11-ம் தேதி நள்ளிரவில் சிறுமி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து (drugged) கலந்து கொடுத்து 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவம் குறித்து ஜனவரி 13-ம் காவல் நிலையத்தில்,புகார் அளித்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதனையடுத்து, சிறுவன் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் வேண்டும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மயக்க மருந்து கொடுத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.