மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 2)
மேஷம் :
பணவரவு அதிகரிக்கும் நாள். எதிலும் பொறுமையுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
குலதெய்வ வழிபாடு துணை நிற்கும்.
பிப்ரவரி 2 : தொடர்ந்து உயரும் தங்கம் விலை!!
மிதுனம் :
தெய்வ வழிபாடு மனநிறைவை உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போல இருக்கும். எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
கடகம் :
மனதில் உற்சாகம் பொங்கும். துணிச்சலாக செயல்பட்டு முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம் :
எதிர்பாராத பணவரவுக்கு கைக்கு வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அமோகமாக காணப்படும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
கணவன் – மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அந்யோன்யம் அதிகரிக்கும். சுபச் செலவு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். இன்று தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
மகா லட்சுமியை வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் வெடிக்கறமாக முடியும். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். வியாபாரம் சுமாராக நடைபெறும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
இன்று மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.
குலதெய்வ வழிபாடு துணை நிற்கும்.
தனுசு :
திடீர் செலவுகளும் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.
மகரம் :
சிறப்பான நாள். புதிய முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் :
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!
மீனம் :
வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சகவியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
மகா லட்சுமி வழிபாடு நன்மை தரும். (2024 February 2).