மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்(2024 February 21)
மேஷம் :
இன்று மிகவும் உற்சாகத்துடன் செயல்படும் நாள். நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதி தரும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
தாய்வழி உறவுகள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.
மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
பிப்ரவரி 21 : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
மிதுனம் :
தந்தை வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். சிலருக்கு வீண்அலைச்சல், உடல் அசதி உண்டாக கூடும். இன்று மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆடை, ஆபரணங்கள் சேரும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
கடகம் :
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் ஆதாயம் உண்டாகும்.
மகாவிஷ்ணு வழிபாடு நன்மை சேர்க்கும்.
சிம்மம் :
தந்தை வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். சுபச் செலவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
நரசிம்மர் வழிபாடு நலம் தரும்.
விருச்சிகம் :
மனதில் சற்று குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
தனுசு :
புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நீங்கி அந்யோன்யம் அதிகரிக்கும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
நீண்ட நாட்கள் கைக்கு வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.
பைரவர் வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டு.
விநாயகரை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
LIVE : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் – 2024 – 2025 | TN Agriculture Budget – 2024 – 2025 | TN Assembly
மீனம் :
எதிர்பாராத பண லாபம் உண்டாகும். மன உறுதியுடன் செயல்படும் நாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும் (2024 February 21).