மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 8)
மேஷம் :
வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சகவியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
மகா லட்சுமி வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
இன்று மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும்.
குலதெய்வ வழிபாடு துணை நிற்கும்.
பிப்ரவரி 8 : அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை!
மிதுனம் :
நினைத்த காரியம் நிறைவேறும். அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விநாயகப் பெருமான் வழிபாடு வெற்றி தரும்.
கடகம் :
இன்று மிககும் உற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம் :
எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
புதிய முயற்சிகளை தொடங்கலாம். வெற்றி உங்கள் வசமாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகள் நீங்கும்.
பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
இன்று தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
சமயோசிதமாக செயல்பட்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மகாலட்சுமியை வழிபாடு நன்மை தரும்.
தனுசு :
மிகவும் உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
மிகவும் உற்சாகமாக செயல்படும் நாளாக அமையும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
இன்று எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார்!
மீனம் :
மனதில் உற்சாகம் பொங்கும். துணிச்சலாக செயல்பட்டு முடிவெடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும் (2024 February 8).