மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 March 23)
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : நீலம்
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே இன்று நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழிலில் வரும் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் காண்பீர்கள்.
விநாயகர் வழிபாடு மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : சிவப்பு
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே இன்று அனுகூலமான நாள். தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : ஊதா
கடகம் :
கடக ராசி நேயர்களே இன்று பணிபுரியும் இடத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட இடமாற்றம் கிடைத்து வேறு ஊருக்கு செல்வீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலியின் மனதை ஈர்க்க முயற்சி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : பச்சை
இதையும் படிங்க : திருச்சி நிருபர்களை தெறிக்க விட்ட வைகோ! – ஸ்டாலின் பரப்புரை!!
சிம்மம் :
சிம்ம ராசி நேயர்களே இன்று மிகவும் உற்சாகமான நாள். தொட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை நன்மை தரும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
குருபகவான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : செம்மஞ்சள்
கன்னி :
கன்னி ராசி நேயர்களே இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கலான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி லாபம் பெருகும். நில விற்பனைத் தொழில், மணல், செங்கல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : காவி நிறம்
துலாம் :
துலாம் ராசி நேயர்களே இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : மெரூன்
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களது தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கையெழுத்து போடாதீர்கள். குடும்பத்தில் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்படுவீர்கள். அவசிய தேவைக்காக நெருங்கிய நண்பரிடம் கடன் வாங்குவீர்கள்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : ஆரஞ்சு
தனுசு :
தனுசு ராசி நேயர்களே இன்று போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். நிலம் வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
பைரவர் வழிபாடு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : பிங்க்
மகரம் :
மகர ராசி நேயர்களே இன்று உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வை அடைவீர்கள். நீண்ட நாட்களாக சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். அடுத்தவருக்குச் செய்யும் உதவியால் வெளிவட்டாரச் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள்.
காமாட்சி அம்மனை வழிபடுவது நன்று.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : சாம்பல் நிறம்
கும்பம் :
கும்ப ராசி நேயர்களே இன்று பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
காளியம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : கருப்பு
மீனம் :
மீன ராசி நேயர்களே இன்று அரசு வேலையில் சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். ஆடம்பரச் செலவால் சேமிப்பை கரைப்பீர்கள். மனைவியின் மனக்குறையை போக்கி சந்தோஷத்தை நிலை நாட்டுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.
குலதெய்வ வழிபட நன்மைகள் ஏற்படும் (2024 March 23).
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : ஊதா