மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 March 25)
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்துமே உங்களுக்கு சாதகமாக முடியும். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தூரத்து உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் உண்டாகும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
சிவ வழிபாடு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : பச்சை
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே இன்று வீட்டிலும் வெளியிலும் உங்களது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்காமல் பேசாதீர்கள், யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்து கொள்வது நல்லது.
முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : ஊதா
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்திற்கு தேவையான புதிய ஆர்டர்களை பெறுவதில் சிரமப்படுவீர்கள். பெரிய மனிதர்கள் ஆதரவால் சில பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.
மகாவிஷ்ணுவை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : மஞ்சள்
கடகம் :
கடக ராசி நேயர்களே இன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமானத்துறை, கமிஷன் வியாபாரம் போன்றவற்றில் அதிக லாபம் பார்ப்பீர்கள். பழைய பாக்கி கடன்களை அடைப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : சந்தன நிறம்
இதையும் படிங்க : இலைக்காக நடக்கும் இறுதிப் போராட்டம்! நாளை என்ன நடக்கும்?
சிம்மம் :
சிம்ம ராசி நேயர்களே இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் இருந்து எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மனைவி உங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பார். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று பெருமை சேர்ப்பார்கள்.
சனி பகவான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : பழுப்பு நிறம்
கன்னி :
கன்னி ராசி நேயர்களே இன்று எதற்கும் அதிகமாக ஆசைப்படுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகளில் இறங்கி விடாதீர்கள். ஃபைனான்ஸ் கம்பெனிகளில் பணம் செலுத்தாதீர்கள். முக்கிய ஒப்பந்தங்களில் படித்துப் பார்த்து கையெழுத்து போடுங்கள். உடன் இருப்பவர்களே வியாபாரத்தைக் கொடுக்க நினைப்பார்கள். கவனமுடன் செயல்படவேண்டிய நாள்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : மெரூன்
துலாம் :
துலாம் ராசி நேயர்களே இன்று காலை முதலே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : கருப்பு
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே இன்று லாபத்தோடு ஒருவருக்கு உதவி செய்வீர்கள். ஆனாலும், நேரம் இப்போது உங்களுக்கு பாதகமாக இருந்தால் நீங்கள் ஓட்டும் வண்டி கூட உங்களுக்கு எதிரியாக மாரி இடையூறை சந்திப்பீர்கள். அதிகம் பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
மீனாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : பிங்க்
தனுசு :
தனுசு ராசி நேயர்களே இன்று எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை இழப்பீர்கள். எப்படியாவது பணத்தை சேர்க்கச் திட்டமிடுவீர்கள். புதிய தொழிலில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் இடமாற்றமும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். உழைப்பால் பரிசு பெறுவீர்கள்.
சரஸ்வதி தேவி வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : சிவப்பு
மகரம் :
மகர ராசி நேயர்களே இன்று சகோதரர்கள் வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் அவசர முடிவுகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மகாலட்சுமியை வழிபடுவது நன்று.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : ஆரஞ்சு
கும்பம் :
கும்ப ராசி நேயர்களே இன்று உங்களை ஒதுங்கிப் போனவர்கள் தேடி வந்து உறவாடுவார்கள். பெரியோர்களின் சந்திப்பு நிம்மதி தரும். கடந்த கால கசப்பான சம்பவங்களால் பாடம் கற்றுக் கொள்வீர்கள். சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : வெள்ளை
மீனம் :
மீன ராசி நேயர்களே இன்று உடைந்து போன உறவுகளை ஒட்ட வைக்க முயற்சிப்பீர்கள். அதில், வெற்றியும் அடைவீர்கள். வியாபாரத்திற்கு தேவையான உரிமம் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகளை விலக்குவீர்கள்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும் (2024 March 25).
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : வானநீலம்
நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம் – ஜான்சிராணி புதிதாக அறிவிப்பு!!