2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தற்போது உள்ள கூட்டணியை விட மிகப்பெரிய கூட்டணி அமைப்போம் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ளேன். குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தையும், பாலம் இடிந்து விழுந்த இடத்தையும் நேரில் பார்வையிட உள்ளேன்.
Also Read : சட்டப்பேரவைக்கு விறுவிறுவென வந்து பரபரவென கிளம்பிய ஆளுநர் ரவியின் உரை வரலாறு..!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது. சின்ன குழந்தை முதல் பெரிய பெண்கள் வரை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்து வருகின்றனர். இவை அனைத்தும் கண்டிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.
தமிழக அரசு சட்ட ஒழுங்கை கையில் எடுத்து அனைவருக்கும் பாதுகாப்பை உருவாக்கித் தர வேண்டும். தற்போது இருக்கின்ற அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ளது.
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சி வளர்ச்சிப் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போது இருக்கும் கூட்டணியை விட மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய கூட்டணி அமையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.