கணவனை பிடிக்காமல், முதல் மனைவி மற்றும் 2வது மனைவி ஓடிவிட்ட .. நிலையில் 3வதாக அழைத்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணை ஆண்டோ என்ற நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ… இவர் அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்..
முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்த இவருக்கும் முதல் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது..அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததால், முதல் மனைவி இவரை விட்டு பிரிந்துசென்றுள்ளார்
அதன்பிறகு, ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணும், ஆண்டோவை பிடிக்காமல், அவரை விட்டு பிரிந்து சென்றுவிட ஆண்டோ, மூன்றாவதாக நீது என்ற பெண்ணுடன் உறவில் இருந்து வந்தார்.அவருடன் குடும்பம் நடத்தலாம் என்று முடிவுசெய்த ஆண்டோ, நீதுவை அழைத்து கொண்டு, ஊரை விட்டு வெளியேறினார். காசர்கோடு பகுதிக்கு சென்று அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நீதுவுடன் வாழ ஆரம்பித்தார்.
மேலும் அங்குள்ள ரப்பர் எஸ்டேட்டிலும் வேலை பார்த்துவந்துள்ளார்.ஆனால், ஆண்டோவை நீதுவுக்கும் பிடிக்கவில்லை.. இவர்களுக்குள் தகராறுகளும், சண்டைகளும் அதிகரித்துள்ளன. தினம் தினம் வீட்டிற்குள் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே வந்த நிலையில் சம்பவ தினத்தன்றும், விவகாரம் முற்றி உள்ளது.. இந்த சண்டையில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த ஆண்டோ, நீதுவை சரமாரியா அடித்து தாக்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆவேசம் அதிகமாகி, நீதுவின் கழுத்தை நெரித்துயுள்ளார்.. இதில் நீது, துடிதுடித்து உயிரிழந்துவிட்டார்.. கடந்த மாதம் 27-ந்தேதி இந்த கொலையை செய்த ஆண்டோ.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துவிட்டதால், நீது கண்ணெதிரே சரிந்து விழுந்து உயிரிழந்ததை பார்த்து ஆண்டோ பயந்துயுள்ளார்
..
ஆனால் அவர் நீதுவை கொலை செய்ததை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல். பிணத்தை எங்கே கொண்டு போய் போடுவது என்றும் தெரியாமல்.. அந்த பிணத்துடனேயே அதே வீட்டில் 3 நாட்கள் ஒன்றாகவே தங்கி இருந்துள்ளார்.. 3 நாட்களுக்கு பிறகு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்த்தையடித்து, அங்கிருந்து தலைமறைவாய்யுள்ளார்.
ஆண்டோ இதன் பிறகு, துர்நாற்றம் அதிகமானதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு, வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர்.அப்போதுதான், நீது இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு, ஆண்டோவை தேடி வந்த போலீசார் தப்பிச்செல்ல ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளுக்குதான் அவர் வருவார் என எண்ணி அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மும்பைக்கு தப்பி செல்ல திருவனந்தபுரம் ரெயில்வே ஸ்டேஷன் வந்தா ஆண்டோவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.. 3வதாக அழைத்து வந்து குடும்பம் நடத்திய பெண்ணை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.