Coimbatore : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை..
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை (Coimbatore) செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்துள்ளார் ராமச்சந்திரன். இவரது மனைவி விசித்ரா. இந்த தம்பதிக்கு ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 2 மகள்கள் இருந்துள்ளனர்.
இளைய மகள் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மூத்த மகள் கனடாவில் மேற்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இன்று ராமச்சந்திரனின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது ராமச்சந்திரன் அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேரும் விஷம் குடித்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

அதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் குடும்பம் புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்த நிலையில், அதற்காக வாங்கிய கடன் தொல்லை அதிகரித்ததன் காரணமாக, 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் பவுடர் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருளை சாப்பிட்டு தற்கொலை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் பிரேதபரிசோதனைக்கு பிறகு தான் இறந்தவர்கள் எவ்வித விஷத்தை பயன்படுத்தினர் என்பது தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ”அப்பாடா சேர்ந்தாச்சு!” கையெழுத்தானது அதிமுக -தேமுதிக தொகுதி பங்கீடு