தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக ( low pressure area ) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.
வரும் 24-ம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22,23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை 23 ஆம் தேதிக்குப் பின்னர் படிப்படியாகக் குறையும் என்றும் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் ( low pressure area ) நிலையில் தற்போது மேலும் இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் ஆற்றங்கரையோரம் வைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.