Sunday, May 11, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home ஆன்மீகம்

தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்.. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தின் சிறப்பு என்ன?

by vidhya
August 16, 2023
in ஆன்மீகம்
0
தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்.. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தின் சிறப்பு என்ன?

ஆடி அமாவாசையை(aadi amavasai) முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். 

முன்னோர்கள் உயிரிழந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு ஆனால் முன்னோர்கள் உயிரிழந்த சரியான நாளில் திதி கொடுக்க முடியாதவர்கள் அல்லது முன்னோர்கள் பலருக்கு ஒரே நாளில் திதி கொடுக்க நினைப்பவர்கள் ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டப படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் நள்ளிரவு முதலே தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வருகை தந்ததால், அப்பகுதியில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க , போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம் மட்டுமே அம்மா மண்டபம் வரை செல்ல அனுமதிக்கபடுகிறது. கார், வேன், ஆட்டோ, போன்ற எந்த வாகனங்களையும்  அம்மா மண்டபம் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பாக சாலையில் முழுவதும் காவல்துறையினர் சிசிடிவி கேமரா அமைத்து தொடர்ந்து கண்கானித்து வருகிறார்கள்.

குறிப்பாக ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தபட்டு வருகிறது. காவிரி ஆற்றின் நடுவே சென்று நீராட தடை விதிக்கபட்டு உள்ளது. ஆனால பொதுமக்கள் தடையை மீறி உள்ளே சென்று நீராடி வருகிறார்கள், அவர்களை ஒலிபெருக்கி மூலம் அழைத்து  காவல்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.

.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: aadi amavasaiamma mandapamDevoteeskaveri rivertharpanam
Previous Post

”விபத்தில் சிக்கிய இளைஞர்..” பதறி ஓடிய எம்.பி. ஆ.ராசா.. அவினாசியில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

Next Post

மண்ணை நேசிப்போம்; மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் – வி.கே.சசிகலா அறிக்கை

Related Posts

மொரிஷியஸ் நாட்டில் ஆன்மீக பயிற்சி அளித்து சிறப்புரையாற்றிய மஹாவிஷ்ணு..!!
ஆன்மீகம்

மொரிஷியஸ் நாட்டில் ஆன்மீக பயிற்சி அளித்து சிறப்புரையாற்றிய மஹாவிஷ்ணு..!!

March 5, 2025
Masal Vada
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மசால் வடை பிரசாதம் – தேவஸ்தானம் அறிவிப்பு..!!

January 21, 2025
Tiruchendur beach
ஆன்மீகம்

திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த பொக்கிஷம் – வியந்து பார்த்த பக்தர்கள்..!!

January 13, 2025
Subrabadam
ஆன்மீகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை சேவை..!!

December 16, 2024
Tiruvannamalai mahadeepam
ஆன்மீகம்

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்..!!

December 13, 2024
parking spaces
ஆன்மீகம்

திருவண்ணாமலை தீப விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 116 இடங்களில் பார்க்கிங் வசதி..!!

December 11, 2024
Next Post
மண்ணை நேசிப்போம்; மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் – வி.கே.சசிகலா அறிக்கை

மண்ணை நேசிப்போம்; மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் - வி.கே.சசிகலா அறிக்கை

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com