செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்குவது எப்படி என்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (aishwarya rajesh) கருத்து தெரிவித்துள்ளார் .
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்கா) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். எனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள் போட்டு தான் நகைகளை வாங்குவார்கள். அந்த வழக்கத்தை நானும் தொடர்கிறேன்.
பெண்களுக்கு நகை மிகவும் பிடிக்கும். எனக்கும் நகைகள் ரொம்ப பிடிக்கும். நான் நடிகையாக இருந்த போதிலும், சிறுக சிறுக சேமித்து நகைகளை வாங்கும் பழக்கத்தை கைவிடவில்லை.
மாதாந்திர நகை சீட்டுகள் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகளை வாங்கலாம். அதாவது, நகைச் சீட்டுகள் வாங்கும்போது, நகைகளுக்கான செய்கூலி, சேதாரம் குறையும்” என்றார்.