திரையுலகில் கால்பதித்து வேர்ல்ட் பேமஸ் நடிகையாக உருமாறிய பின்பும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இன்ஸ்டா தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை கெத்தாக ஆரம்பித்து உள்ளார் .
இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் கால்பதித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருகிறார் .

தமிழ்,தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குநர் விக்னேஷ் சிவனை ஆசை ஆசையாக காதலித்து கரம்பிடித்தார்.

இதையடுத்து வாடகைத் தாய் மூலம் அழகிய இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நயன்-விக்கி குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர் .

குழந்தை பிறந்து திட்டத்தட்ட 10 மாதங்கள் ஆன நிலையிலும் ஒரு சில காரணங்களுக்காக இதுவரை குழந்தைகளின் முகத்தை காட்டாமலே பொத்தி பொத்தி வளர்த்து வந்த இவர்கள் தற்போது தங்களது இரட்டை குழந்தைகளின் முகத்தை உலகிற்கு கெத்தாக காட்டியுள்ளனர்.

திரையுலகில் கால்பதித்து வேர்ல்ட் பேமஸ் நடிகையாக உருமாறிய பின்பும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டா தளத்தில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை கெத்தாக ஆரம்பித்து உள்ளார் .
இதில் தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் அழகிய வீடியோவையும் நடிகை நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் பாடலுடன் உருவாகியுள்ள அந்த வீடியோ பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு….’ என நடிகை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தொடங்கப்பட்ட நடிகை நயன்தாராவின் இந்த இன்ஸ்டா கணக்கில் தற்போது வரை 1.2 மில்லயன் நபர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
https://www.instagram.com/p/CwmrZjWvYDG/?utm_source=ig_web_copy_link