நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் அவர் நேற்று இரவு பழனி முருகன் கோவிலில் 600 படிகளில் சூடம் (600 steps) ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால், கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த சிகிச்சைகள் பலன் அளிக்காத நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்தார் சமந்தா. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், இறுதியாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்த பின்னர் தான் அவருக்கு நோய் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.
இதனையடுத்து, 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் தான் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பினார். மேலும், தற்போது கைவசம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில், குணசேகரன் என்பவர் இயக்கத்தில், அவர் நடித்துள்ள சகுந்தலம் என்கிற திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சமீபத்தில் சகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, கண்ணீர்மல்க பேசி இருந்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகை சமந்தாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் இவர் படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவில்களுக்கு செல்லாமல் இருந்து வந்த சமந்தா தற்போது பழனி முருகன் கோவிலில், 600 படிகளில் (600 steps) சூடம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ளார்.