அதிமுக-வில் சசிகலாவை இணைக்கும் திட்டம்? – ஓ.பி.எஸ் சூசகம்..!

அதிமுக-வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

அதிமுக-வில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்ம் மாறுபட்ட கருத்து தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Total
0
Shares

Comments are closed.

Related Posts