aiadmk dmk alliance | பாராளுமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது அதிமுக.
நேற்று வரை எஸ்.டி.பி.ஐ, புதிய பாரதம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கட்சிகளுடன் மட்டும் அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பார்வேர்வு பிளாக் கட்சியும் தனது ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்துள்ளது.
இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி தனது ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும், தேனி அல்லது ஏதாவது ஒரு தென் மாவட்ட தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ” புகைச்சலை கிளப்பிய ஆளுநரின் பேச்சு..” வலுக்கும் கண்டனம்!
கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைமையில் உருவான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பார்வர்டு பிளாக், திமுகவுக்கு தனது ஆதரவை தெர்விக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக தற்போது தனது ஆதரவை அதிமுகவுக்கு உறுதிப்படுத்தி உள்ளது.
அதே போல, பா.ம.க. மற்றும் தேமுதிகவையும் தனது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முயற்சி செய்து வரும் நிலையில் (aiadmk dmk alliance), ஆரம்பத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட தேமுதிகவும் அதிமுகவுடன் கூட்டணி சேரும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: SPORTSUPDATE |அதிவேக பந்து வீச்சு – ஷப்னிம் சாதனை
கடந்த சில நாட்களுக்கு முன் முன்னால் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் அடங்கிய அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவானது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் வீட்டுக்கே சென்று கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், பிரேமலதா, எல்.கே.சுதீஸ் உள்ளிட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் இன்று மாலை 4 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வருகை தரவிருப்பதாகவும், அப்போது, அதிமுக – தேமுதிக கூட்டணி கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி, கிருஷ்ணகிரி, விருதுநகர், கடலூர், திருச்சி ஆகிய 4 பாராளுமன்ற தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் கூறுப்படுகிறது.