யார் வந்தாலும் கைதூக்கி விடுவதுதான் அதிமுகவுக்கு வழக்கம்; அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் (virudhunagar) அடையாளம் தெரியாமல் போய்விட்டனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரை ஆதரித்து இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு கூடிருந்த திரளான மக்களிடம் எழுச்சி உரையாற்றிய அவர் கூறியதாவது :
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா, புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் மகன் வி.விஜய பிரபாகரனுக்கு கொட்டு முரசு சின்னத்தில் வாக்களித்து, தமிழக உரிமையை மீட்கவும், தமிழகத்தை காக்கவும் உதவுங்கள்
புதிய தலைமை செயலக கட்டிட முறைக்கேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் எங்கள் அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று ஆட்சி மாறியதும் அந்த வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் இதை விசாரிக்கும்
இந்த ஆட்சி வந்த பிறகு, முதியோர்கள் தனியாக வசிக்கும் இடத்தில் எல்லாம், அவர்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவம் நடக்கிறது.
தமிழகத்தில் எது கிடைக்கிறதோ இல்லையோ, போதை பொருள் அதிகமாக கிடைக்கிறது. ஒவ்வொரு சந்திலும் கஞ்சா சுலபமாக கிடைக்கிறது.
திமுக அயலக அணி நிர்வாகி போதை பொருள் கடத்தி கைதாகியுள்ளார். போதை பொருள் கடத்த அயலக அணி வைத்துள்ளனர்.
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவோம் என சொல்லிவிட்டு, இன்று அந்த திட்டத்தையே திமுக அரசு நிறுத்திவிட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, கஞ்சா போதையில் வெட்டுக்குத்து சம்பவம் நடக்கிறது.
Also Read : https://itamiltv.com/is-dmk-a-fake-partner-in-nellai/
கேஸ் சிலிண்டர் விலை மாதம் 100 ரூபாய் குறைப்போம், பெட்ரோல் – டீசல் விலை குறைப்போம் என்றார்கள். குறைத்தார்களா? டீசல் விலை உயர்வு தான், விலைவாசி உயர்வுக்கு காரணம். பெட்ரோல் – டீசல் விலை மத்திய அரசும் குறைக்க வேண்டும்.
பட்டாசு தொழில் சரிந்து கிடக்கிறது. அப்படியிருக்க நீங்கள் நலமா என கேட்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் யார் நலமாக இருக்க முடியும்? எங்களை பற்றி அதிமுக ஆட்சியில் புகார் கொடுக்கும்போது உங்களுக்கு ஆளுநர் நல்லவர், இப்போது கெட்டவரா?
எப்போதும் திமுகவுக்கு தங்கள் கூட்டணிக் கட்சிகளை வாழ வைத்த வரலாறு இல்லை. அதிமுக கூட்டணிக் கட்சிகளை தூக்கிவிடும். திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக அமைச்சர்களால் தூக்கம் போய்விட்டது என்று புலம்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
யார் வந்தாலும் கைதூக்கி விடுவதுதான் அதிமுகவுக்கு வழக்கம்; அதிமுகவை அழிக்க (virudhunagar) முற்பட்டவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.