ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. முன்னதாக ஜூலையில், அந்நிறுவனம் போஸ்ட்பெய்டு திட்டத்தின் விலையை அதிகரித்ததோடு ரூ.49 திட்டத்தை நீக்கியது.
இந்நிலையில் தற்போது ஏர்டெல்லின் 28 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.99 முதல் தொடங்கும் வகையில் 25% அதிகரித்துள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆகவும், 28 நாட்கள் 2G B மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149-லிருந்து ரூ.179-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.