நடிகர் அஜித் Good Bay Ugly படத்தின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் நெகிழ்ச்சி பதிவுடன் அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி படத்தின் அனைத்து பணிகளும் இனிதே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது அடுத்த படமான Good Bay Ugly படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் இப்படத்தின் டப்பிங் பணியை இனிதே தொடங்கியுள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால், இப்போது கடவுள் மற்றும் இந்த பிரபஞ்சம் இணைந்து அவருடன் பணியாற்ற வைத்துள்ளது. அவர் டப் செய்வதை அருகிலேயே இருந்து என்னைக் கேட்கவும் வைத்திருக்கிறது.
இந்தாண்டு Good Bad Ugly என்ற அற்புதமான பயணத்துடன் தொடங்கி முடிந்துவிட்டது. இந்த நினைவுகள் அனைத்தையும் என் மனதில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்.
உங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். Love u Sir” என இயக்குநர் ஆதிக் ரசிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.